ஆயுத வாகனங்களை தாக்குவோம்! - மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து 18 ஆவது நாளாக இன்று நீடித்து வருகின்றது.
ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரைன் இராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றார்கள்.
இதனால் தலைநகர் கீவ் மீதான தாக்குதலை ரஷ்யா அதிகப்படுத்தியபடியே இருக்கின்றது. மனிதாபிமான அடிப்படையில் கீவ் உள்ளிட்ட 5 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்தாலும், அதையும் மீறி தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஏராளமான ஆயுதங்களை உக்ரைனில் குவித்து வருகின்றன.
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்ற நிலையில் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஏராளமான ஆயுதங்களை உக்ரைனில் குவித்து வருகின்றன.
இவ்வாறு உக்ரைனுக்கு வெளிநாட்டு ஆயுதங்களை கொண்டு செல்லும் வாகனங்களும், ரஷ்ய இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.