கடும் கோபத்தில் ரணில் எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை
அரசாங்கம் தொடர்வதற்கு ஆதரவளிக்காவிடில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.
அமைச்சுப் பதவிகளை வழங்குவதில் அநீதி இழைக்கப்பட்டதாக பொதுஜன பெரமுன கட்சி தலைமைக்கு, ஜனாதிபதி அறிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் கடும் நெருக்கடியில் இருக்கும் வேளையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் மக்களின் பணத்தை வீணடிக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சரவை மாற்றம்
இதன்போது மேற்கொள்ளப்பட்ட அமைச்சு மாற்றத்தில் உள்ளடங்களின் மாற்றமே தவிர புதிய பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அமைச்சுப் பதவிகளை வழங்கி மக்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்க தயாரில்லை என அவர் பொதுஜன பெரமுன கட்சியிடம் தெரிவித்துள்ளார்.





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 14 மணி நேரம் முன்

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam
