இஸ்ரேலுக்கு உரிமை உண்டு: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய சீனா
இஸ்ரேல் தன்னை பாதுகாத்து கொள்ள உரிமை உள்ளது என சீனா தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் குறித்து சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் கடந்த வாரம் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதனையடுத்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசியில் உரையாடியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்
மேலும் அவர், 'ஒவ்வொரு நாட்டுக்கும், தன்னை பாதுகாத்து கொள்ள உரிமை உள்ளது' என தெரிவித்துள்ளார். ஹமாஸ் தாக்குதலில் 1,400 இஸ்ரேல் மக்கள் பலியாகியுள்ளனர்.
அதேபோல் இஸ்ரேலின் தாக்குதலில் 5,100 பாலஸ்தீன மக்கள் உயிரிழந்திருந்தனர். இந்த தொடர் மோதலால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்படுவது ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா ஆதரவு வழங்கும் நாடுகளுக்கு சீனா எதிர் நிலைப்பாட்டினை எடுக்கின்றமை வழமை.
இந்த முறை இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ள நிலையில் சீனாவும் அதற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளமை பலராலும் உண்ணிப்பாக அவதானிக்கப்படுகிறது.
உக்ரைனை - ரஷ்ய போரில் அமெரிக்கா உக்ரைனை ஆதரித்த நிலையில் அதற்கு எதிர்மாராக சீனா ரஷ்யாவை ஆதரித்தது.
இந்த நிலையில் இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தத்தின்போது சீனாவின் கருத்தானது மிகவும் உண்ணிப்பாக அவதானிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.