முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு விளக்கமறியல்
புதிய இணைப்பு
இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைதான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்களைச் சேகரித்த குற்றச்சாட்டில் இன்று காலை கைது செய்யப்பட்ட இவர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை ஈட்டியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் அவர் இவ்வாறு கைதாகியுள்ளார்.
ஈரானின் வான்வழி தாக்குதல்களால் மீண்டும் உச்சக்கட்ட பதற்றம்! நடுவானில் சுட்டு வீழ்த்தப்படும் ட்ரோன்கள்
சட்டவிரோத சொத்து குவிப்பு
இன்று முற்பகல் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் அவர் முன்னிலையாகியிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைது செய்துள்ளது.
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஐரோப்பாவுக்கு கடும் பின்னடைவு... மிகப்பெரிய திட்டமொன்றைக் கைவிட்ட ஜேர்மனியும் பிரான்சும் News Lankasri