சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..! அமெரிக்காவின் அவசர கட்டாய வெளியேற்ற அறிவிப்பு
சவுதியிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று, தனது தூதரக அதிகாரிகளுக்கு அமெரிக்கா அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகள் மீதும், அங்குள்ள அமெரிக்க படைகள் மற்றும் இராணுவ நிலைகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கட்டாய வெளியேற்ற அறிவிப்பு
ஈரான் போர் தொடங்கியதிலிருந்து கட்டாய வெளியேற்ற அறிவிப்பு வெளியாவது இதுவே முதல் முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள தங்கள் அமெரிக்க ஊழியர்களையும், தூதரக அதிகாரிகளையும் நாட்டை விட்டு வெளியேற அமெரிக்க வெளியுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு, நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரியாதில் உள்ள தூதரகம் முக்கிய பணியாளர்களுடன் செயல்படும் என்றும், இது தற்காலிக நடவடிக்கை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை தூதரகம் இரண்டு ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளானதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.