100 ஆண்டுகளுக்கு மேல் புனரமைக்கப்படாத வீதி - அநுர ஆட்சியிலும் தொடரும் அவலம்.. மக்கள் குற்றச்சாட்டு

Sri Lanka Upcountry People Badulla Sri Lanka Politician Sri Lanka Government NPP Government
By Dhushi Jul 25, 2026 05:59 AM GMT
Report

கொஸ்லந்தை - மீரியபெத்த தோட்டப் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வீதி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், அப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகவும், தற்போதைய அரசாங்கம் இந்த பிரச்சினை தொடர்பில் அலட்சியமாக செயற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சந்திரபுரம், கொஸ்லந்தை எஸ்டேட், மீரியபெத்த, அம்பராகல உள்ளிட்ட பகுதிகளில் வாழும் 6,000க்கும் அதிகமான மக்களின் அன்றாட வாழ்க்கை இந்த வீதியின் மோசமான நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள எல்நினோ தாக்கம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள எல்நினோ தாக்கம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

100 வருடங்களுக்கு மேல் புனரமைக்கப்படாத வீதி

100 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு புனரமைப்பும் இன்றி, குறித்த வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

100 ஆண்டுகளுக்கு மேல் புனரமைக்கப்படாத வீதி - அநுர ஆட்சியிலும் தொடரும் அவலம்.. மக்கள் குற்றச்சாட்டு | Road Reconstruction In Koslanda Estate Area

இதுவரை பல அரசாங்கங்கள் மாற்றமடைந்த போதிலும், இந்த பிரச்சினை தொடர்பில் அரசியல் அலுவலகங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பல கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும், பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதுவரை எவரும் உரிய தீர்வோ அல்லது பதிலோ வழங்கவில்லை என்றும், தங்களது வாக்குகளால் உருவாக்கப்பட்ட உள்ளூராட்சி அமைப்புகளால் கூட எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் தற்போது தங்களுக்கு எதிராக செயற்படுவதாகவும், இதனால் அப்பகுதி இளைஞர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களின் கோரிக்கை

இதற்கிடையில், கடந்த மே 18ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார குறித்த பகுதிக்கு விஜயம் செய்து, “இரண்டு வாரங்களுக்குள் அனுமதி பெறப்படும்; இந்தத் திட்டத்திற்காக ரூ.500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது” என உறுதியளித்ததாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

100 ஆண்டுகளுக்கு மேல் புனரமைக்கப்படாத வீதி - அநுர ஆட்சியிலும் தொடரும் அவலம்.. மக்கள் குற்றச்சாட்டு | Road Reconstruction In Koslanda Estate Area

எனினும், இரண்டு மாதங்கள் கடந்தும் எந்தவித நடவடிக்கையோ பதிலோ இல்லாத நிலையில், சில பிரதேச சபை உறுப்பினர்கள் தங்களது சொந்த பகுதிகளுக்கே முன்னுரிமை வழங்கி வீதி புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால், வீதி புனரமைப்பு பணிகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், பெண்கள், மாணவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளிட்ட பலர் தினமும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதால், ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு தங்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

100 ஆண்டுகளுக்கு மேல் புனரமைக்கப்படாத வீதி - அநுர ஆட்சியிலும் தொடரும் அவலம்.. மக்கள் குற்றச்சாட்டு | Road Reconstruction In Koslanda Estate Area

100 ஆண்டுகளுக்கு மேல் புனரமைக்கப்படாத வீதி - அநுர ஆட்சியிலும் தொடரும் அவலம்.. மக்கள் குற்றச்சாட்டு | Road Reconstruction In Koslanda Estate Area

ஆகஸ்ட் 17இற்குள் விண்ணப்பிக்கவும் - பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு

ஆகஸ்ட் 17இற்குள் விண்ணப்பிக்கவும் - பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு

கொழும்பு போர்ட் சிட்டியில் ஏற்பட்ட மோதல்! படுகொலை செய்யப்பட்ட சீனப்பிரஜை குறித்து அம்பலமான தகவல்கள்

கொழும்பு போர்ட் சிட்டியில் ஏற்பட்ட மோதல்! படுகொலை செய்யப்பட்ட சீனப்பிரஜை குறித்து அம்பலமான தகவல்கள்


மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US