ஜனாதிபதி மாளிகை தொடர்பில் வெளியான முக்கிய அறிக்கை
2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் ஜனாதிபதி தங்கியிருக்காவிட்டாலும், அவற்றில் பெரும்பாலானவற்றில் பல்வேறு நபர்கள் 3,089 பேர் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ஏழு ஜனாதிபதி மாளிகைகளின் மின்சாரம், தொலைபேசி உள்ளிட்ட ஏனைய வசதிகளுக்காக அந்த ஆண்டில் 32,982,675 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதுடன், அக்காலகட்டத்தில் நடைபெற்ற கூட்டங்களின் எண்ணிக்கை மூன்று ஆகும்.
ஏழு ஜனாதிபதி மாளிகைகளின் செலவு
2025 ஆம் ஆண்டில் கதிர்காமம், மஹியங்கனை மற்றும் பெந்தோட்ட ஆகிய மாளிகைகளில் 2025 ஆம் ஆண்டில் எந்தவொரு கூட்டமும் நடத்தப்படவில்லை என்பதுடன், எவரும் தங்கியிருக்கவும் இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், 2025 ஆம் ஆண்டில் தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட ஏனைய செலவுகளுக்காக 2,447,754 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட ஏழு மாளிகைகள் கொழும்பு கோட்டை, கண்டி, அனுராதபுரம், கதிர்காமம், மஹியங்கனை, நுவரெலியா மற்றும் பெந்தோட்டா ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.