ஈரானின் முதன்மை நிபந்தனைகள் அமெரிக்காவுக்கு
போர் முடிவுக்கு வருவதற்கான ஈரானின் முதன்மை நிபந்தனைகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் தேசிய பாதுகாப்பு சபை செயலாளரும் அந்த நாட்டின் பாதுகாப்புப் படை பிரதானியுமான மொஹ்சன் ரேசாய் (Mohsen Rezaei), இதனை ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
திருப்திகரமான பதில் வராத வரை
அனைத்து முனைகளிலும் ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவது, முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானிய நிதிகளை விடுவிப்பது, ஈரான் மீதான பொருளாதார மற்றும் பிற தடைகள் / முற்றுகைகளை (Blockade) முடிவுக்குக் கொண்டுவருவது என்பன இந்த நிபந்தனைகளாகும்.

இந்த நிபந்தனைகள் கட்டார் நாட்டின் மத்தியஸ்தம் மூலமாக அமெரிக்காவிற்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த முன்மொழிவுகள் தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பரிசீலனை மற்றும் பதிலுக்காகக் காத்திருப்பதாக மொஹ்சன் ரேசாய் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க தரப்பில் இருந்து முறையான மற்றும் திருப்திகரமான பதில் வராத வரை பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.