எயார்பஸ் கொடுக்கல் வாங்கலை புரட்டி போட்ட மேலுமொரு பாரிய பண மோசடி!

Nuwara Eliya Navin Dissanayake United States of America FCID - Financial Crimes Investigation Division
By Kanthan Sep 19, 2026 05:04 AM GMT
Report

 எயார் பஸ் கொடுக்கல் வாங்கலை புரட்டி போட்ட மேலுமொரு பாரிய பண மோசடி தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளது. சுவீடன் நாட்டிலிருந்தே குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

எயார்பஸ் (Airbus) மோசடியில் அமெரிக்க டொலர் இரண்டு மில்லியன். ஆனால் இதன் மதிப்பு அமெரிக்க டொலர் 54 மில்லியன்.

இலங்கை ரூபாவில் சொல்ல முடியாத தொகையாகும்.இந்த மோசடி தொடர்பில் அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

மொட்டுக் கட்சியில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய பெண்ணிடம் கேட்ட மோசமான இலஞ்சம்! பகிரங்கப்படுத்திய பெண்..

மொட்டுக் கட்சியில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய பெண்ணிடம் கேட்ட மோசமான இலஞ்சம்! பகிரங்கப்படுத்திய பெண்..

ஆரம்பிக்கப்பட்ட காலம்

இந்த மோசடியின் ஆரம்பம் 2008 இலிருந்து என்று தான் அறிக்கைகளில் உள்ளது. ஆனால் 2013 இலிருந்து இலங்கையில் உள்ள கணக்குகளுக்கு (Accounts) மில்லியன் கணக்கில் அமெரிக்கப் பணம் அனுப்பப்பட்டுள்ளது .

2013ல் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலகட்டமாகும். அக்காலத்தில் இலங்கைக்கு வந்த CPCU என்னும் திட்டத்துடன் தொடர்புடைய பணம் என்று தான் சொல்லப்படுகிறது.

ஆனால் அப்போது இலங்கையில் உள்ளவர்களுக்கு இது குறித்துப் பெரிய அறிவு இருக்கவில்லை. இது தொடர்பில் 2019-இல் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஒரு முறைப்பாட்டை B-அறிக்கையாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறது,

எயார்பஸ் கொடுக்கல் வாங்கலை புரட்டி போட்ட மேலுமொரு பாரிய பண மோசடி! | United States Fraud

அதாவது FCID-இல் இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார பாரிய அளவிலான ஊழல் ஒன்றைச் செய்துள்ளார் என்று.

ஆனால் இது தொடர்பாக முதன்முதலில் இலங்கை ஊடகங்களில் வெளிவந்த பெயர் தான் ரியன்ஷி எட்வர்ட் (Rienzie Edwards,). இந்த ரியன்ஷி எட்வர்ட் என்பவர் நுவரெலியா ரேஸ்கோர்ஸ் மைதானம், ரோயல் டர்ஃப் கிளப் (Royal Turf Club) 2012-இல் ஐந்து ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்துள்ளார்.

அப்போது நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு (UDA) கோட்டாபய ராஜபக்சவே பொறுப்பாக இருந்தார். அதாவது அமெரிக்காவிலிருந்து அவ்வப்போது 2013-14 காலப்பகுதியில் வந்த இந்தப் பணம், இலங்கையில் உள்ள பலரின் கணக்குகளுக்கு வந்துள்ளது.

Ascension என்ற கணக்கும், ரெயான் எட்வர்ட்டின் மனைவி புண்யாவின் கணக்கும், அதைத் தொடர்ந்து மேகான்ஃபீல்ட் (Magonfield Construction) என்ற கணக்கும் மற்றும் மேலும் சில கணக்குகளும் வந்துள்ளது.

இந்தச் சம்பவத்தை அமெரிக்கா இலங்கைக்கு 2016 டிசம்பர் மாதத்தில் அறிவிக்கிறது. ஏன் இந்த ரியன்ஷி எட்வர்ட் (Rienzie Edwards பற்றிய விசாரணைகள் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.

மோசடி மூடிமறைக்கப்பட்ட விதம்

ரவி வைத்தியலங்கார என்ற ஊழல் அதிகாரி கோடிக்கணக்கான பணத்தைப் பெற்றுக்கொண்டு, தனியாகக் கம்பனி ஒன்றை ஆரம்பித்து, FCID-இல் இருந்த கொண்டே அதை பணம் சம்பாதிக்கும் ஒரு இடமாக மாற்றியுள்ளார்.

FCID-க்கு இவரை யார் கொண்டுவந்து போட்டது? இவருக்கு இங்கு வர யார் அனுமதி அளித்தது? அதாவது 54 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பவம் எப்படி மூடிமறைக்கப்பட்டது? இவர் பணத்தைப் பெற்றுக்கொண்டு, மூடி மறைத்துள்ளார்.

ஏனெனில் இது ரவி வைத்தியலங்காரவால் மட்டும் செய்யக்கூடிய விடயமல்ல. நல்லாட்சி அரசாங்கத்தில் ரியன்ஷி எட்வர்ட் (Rienzie Edwards- ரவி வைத்தியலங்காவைக் காப்பாற்றியது நவீன் திசாநாயக்க.

ஏனெனில் இந்த CPCU திட்டத்திற்காக 2016-இல் ரெயான் எட்வர்ட்டுடன் நவீன் திசாநாயக்க ஆகியோர் ஜப்பானுக்குச் சென்றுள்ளனர்.

எயார்பஸ் கொடுக்கல் வாங்கலை புரட்டி போட்ட மேலுமொரு பாரிய பண மோசடி! | United States Fraud

ஏனெனில் 2016-இல் ரியன்ஷி எட்வர்ட்டிற்கு (Rienzie Edwards 30 வருடங்களுக்கு நுவரெலியா ரேஸ்கோர்ஸ் (Racecourse) மைதானத்தைக் குத்தகைக்கு விட திட்டமிட்டதே நவீன் திஸாநாயக்கா தான்.

மேலும் நவீன் திசாநாயக்கதான் இந்த ரியன்ஷி எட்வர்ட்டின் பின்னணியில் இருந்து இவரை அரசியல் ரீதியாகப் பாதுகாத்த நபர். இப்போது அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி. மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளுக்கு அடிப்படையாக அமைந்த முக்கிய காரணங்கள்- CPCU திட்டத்திற்கு முதலீட்டாளர்களிடம் (Investors) அதாவது அமெரிக்கக் குடிமக்களிடம் இருந்து எனக் கூறப்படுகிறது.

உலகத்தில் இல்லாத ஒரு திட்டத்தைக் காட்டி, இதில் முதலீடு செய்யுமாறு அமெரிக்கக் குடிமக்களிடம் பெறப்பட்ட பணம் என்றுதான் அமெரிக்க நீதிமன்றம் கூறுகிறது.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) நிச்சயமாக இதன் தகவல்கள் இருக்க வேண்டும்.

செப்டம்பர் 24 இல் கதி கலங்கப்போகும் கொழும்பு : 159 எம்பிக்களையும் மிரட்டும் சஜித்

செப்டம்பர் 24 இல் கதி கலங்கப்போகும் கொழும்பு : 159 எம்பிக்களையும் மிரட்டும் சஜித்

இலங்கையில் வாகனங்களின் விலைகளில் திடீர் வீழ்ச்சி - வெளியான காரணம்

இலங்கையில் வாகனங்களின் விலைகளில் திடீர் வீழ்ச்சி - வெளியான காரணம்

   

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US