மத்திய கிழக்கு பதற்ற நிலை : அநுர நாட்டு மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும், அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தடையின்றி எரிபொருள் மற்றும் எரிசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (10.03.2026) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கின் தற்போதைய பதற்ற நிலை
இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது: மத்திய கிழக்கு மோதல்களால் எத்தகைய சவால்கள் ஏற்பட்டாலும், இன்னும் இரண்டு மாதங்களுக்குத் தேவையான எரிசக்தி கையிருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கின் தற்போதைய பதற்ற நிலை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்பதால், எரிபொருள் மற்றும் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு ஜனாதிபதி மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.