இலங்கையை நோக்கி நகரும் காற்றழுத்தத் தாழ்வு நிலை! பல மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை

Climate Change Floods In Sri Lanka Rain Flood
By Rakesh Oct 25, 2026 09:19 PM GMT
Report

அரபிக்கடலில் இருந்து நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழ்நாட்டின் ஊடாக வங்காள விரிகுடாக் கடலுக்குள் நுழையத் தொடங்கியுள்ளது என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதியும் புவியியல் மற்றும் வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.

 இதன் காரணமாக வடக்கு, கிழக்கு, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று(26) திங்கட்கிழமை பலத்த மழை பெய்யக்கூடும் என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் அவர் வெளியிட்டுள்ள விசேட வானிலை அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவின் சூறாவளி 

இந்தச் சுழற்சியானது இன்று திங்கட்கிழமை அதிகாலை தென்கிழக்கு திசை நோக்கி நகர்ந்து யாழ்ப்பாணம், முல்லைத்தீவுக் கடற்பகுதியூடாகத் திருகோணமலைக் கடற்கரையை அண்மித்து, பின்னர் மீள வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தனித்த ஒரு நிகழ்வாக 'அர்னாப்' புயலைப் பின்தொடர்ந்து ஆந்திரப் பிரதேசத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையை நோக்கி நகரும் காற்றழுத்தத் தாழ்வு நிலை! பல மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை | Turbulent Sea Surface Due Storm Arnab Heavy Rain

வங்காள விரிகுடாவின் சூறாவளி வரலாற்றில் இவ்வாறானதொரு நிகழ்வு முற்றிலும் புதியது என்று குறிப்பிட்ட அவர், இந்த நகர்வு காரணமாக வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல மாவட்டங்கள் விசேட அவதானிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இன்று திங்கட்கிழமை முழுவதும் பரவலாகக் கனமழையும், ஒருசில இடங்களில் மிகக் கனமழையும் பெய்யக்கூடும்.

 தொடர்ச்சியான மழை

தீவகப் பகுதிகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் நாளை செவ்வாய்க்கிழமை காலை வரை மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.

புத்தளம், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை பெய்யக்கூடுவதுடன், தாழ்நிலங்களில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு அபாயமும் உள்ளது. இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தொடர்ச்சியான மழையின் காரணமாக நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால், மலைப்பிரதேச மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இலங்கையை நோக்கி நகரும் காற்றழுத்தத் தாழ்வு நிலை! பல மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை | Turbulent Sea Surface Due Storm Arnab Heavy Rain

அர்னாப் புயல் மற்றும் வளிமண்டலச் சுழற்சியின் தாக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு, வடமேற்கு, மேற்கு மற்றும் தென்கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதால், மீனவர்கள் எக்காரணம் கொண்டும் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், மழையுடன் கூடிய வேளைகளில் செறிவான இடிமின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானமாகச் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நீதியைப் புதைக்கும் கறுப்பு அறிக்கை! செம்மணி விவகாரத்தில் வெடித்த சர்ச்சை

நீதியைப் புதைக்கும் கறுப்பு அறிக்கை! செம்மணி விவகாரத்தில் வெடித்த சர்ச்சை

கிங்ஸ்பரி ஹோட்டலில் முகத்தை மூடிக்கொண்டு சரத் வீரசேகரவுடனான சந்திப்பு! பின்னணியை வெளியிட்ட கஸ்ஸப தேரர்

கிங்ஸ்பரி ஹோட்டலில் முகத்தை மூடிக்கொண்டு சரத் வீரசேகரவுடனான சந்திப்பு! பின்னணியை வெளியிட்ட கஸ்ஸப தேரர்

மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US