அமெரிக்காவின் கடும் எச்சரிக்கையையும் மீறி இலங்கை அரசின் அதிரடி நடவடிக்கை
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் IRIS DENA கப்பல் மீதான அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானிய கடற்படையினரின் சடலங்களை விரைவாக திருப்பி அனுப்பப்படவுள்ளது.
அதற்கு தேவையான நடவடிக்கைகளை ஈரானிய இராணுவம் முன்னெடுத்து வருவதாக, ஈரானின் பார்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கப்பலில் காணாமல் போன 104 பேரில் 84 பேர் இதுவரை சடலமாக மீட்கப்பட்டுள்ளன.
இராணுவ மக்கள் தொடர்பு
மீட்கப்பட்ட சடலங்களை விரைவில் ஈரானுக்கு திருப்பி அனுப்பப்படும் என்றும் இராணுவ மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கான நடவடிக்கையில் ஈரானிய வெளியுறவு அமைச்சு, இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் ஈடுபட்டுள்ளது.
எனினும், உயிரிழந்த இந்த ஈரானிய கடற்படையினரின் சடலங்களை திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா, இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.