யாழில் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள பொது நினைவேந்தல்
இலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காலகட்டங்களில் சாவினைத் தழுவிய, தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செழுத்தும் நிகழ்வு பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது, தமிழின வறலாற்றில் என்றுமே மறக்கமுடியாத 'வெலிக்கடை சிறைப் படுகொலை ' இடம்பெற்ற நாளான எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி, வியாழக்கிழமை மாலை 3.05 மணிக்கு, யாழ்ப்பாணத்திலுள்ள 'தந்தை செல்வா கலையரங்கில்' ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

சமூகத்தின் பெயரில் இலங்கைச் சிறைகளுக்குள் இரையாக்கப்பட்ட உறவுகளை உணர்வுபூர்வமாக நினைவுகூறும் இந்நிகழ்வில், சர்வமதத் தலைவர்கள், அரசியல் கைதிகளின் பெற்றோர் உறவினர்கள், முன்னைநாள் அரசியல் கைதிகள், சர்வகட்சி அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவ மற்றும் ஆசிரியர் சமூகத்தினர், ஊடகத்துறை சார்ந்தவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தவறாது கலந்து கொள்ளுமாறு சமூக உரிமையோடு அழைத்து நிற்கின்றது 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பு.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 7 மணி நேரம் முன்
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்