ரஷ்ய படையினரை கல்லறை வரை தமது படைகள் கொண்டு செல்லும்! உக்ரைன் ஜனாதிபதி எச்சரிக்கை
உக்ரைனில் போர்க்குற்றங்களைச் செய்யும் எந்தவொரு ரஷ்ய படையினரையும், "கல்லறை" வரை தமது படைகள் கொண்டு செல்லும் என்று உக்ரைன் ஜனாதிபதி ரஷ்ய படையினரை எச்சரித்துள்ளார்.
கியேவில் இருந்து உக்ரைன் மக்களுக்கு தனது இரவு உரையை வழங்கிய வோலோடிமிர் ஸெலென்ஸ்கி,இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
"உக்ரைனில் போரின் போது பல குடும்பங்கள் இறந்துள்ளன? "மன்னிக்க மாட்டோம். மறக்க மாட்டோம்". இந்தப் போரில் அட்டூழியங்களைச் செய்த அனைவரையும் தண்டிப்போம் என்றும் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டார்.
"இந்த பூமியில் உங்களுக்காக கல்லறையைத் தவிர அமைதியான இடம் இருக்காது" என்றும் ரஷ்ய படைகளை எச்சரித்துள்ளார்.
"ரஷ்ய படைவீரர்கள் ஏற்கனவே செய்த அட்டூழியங்கள் இன்னும் போதுமானதாக இல்லை என்று தெரிகின்றது. அவர்கள் இன்னும் அதிகமாக மக்களை கொல்ல விரும்புகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மொகோவிற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு மேற்கத்திய தலைவர்களை ஸெலென்ஸ்கி, தமது உரையின் போது வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் போதாது என்றும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்...
உக்ரைன் மீது மீண்டும் குண்டு மழை: ரஷ்யாவின் முடிவால் தவிக்கும் மக்கள்
உக்ரைனில் விழுந்த 500 கிலோ ரஷ்ய வெடிகுண்டு! வெளியான புகைப்படம்
உக்ரைனில் இராணுவ வீரர்கள் முன்னிலையில் நடைபெற்ற திருமணம் - வைரலாகும் காணொளி