உக்ரைன் மீது மீண்டும் குண்டு மழை: ரஷ்யாவின் முடிவால் தவிக்கும் மக்கள்
உக்ரைன் மீது மீண்டும் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன.
ரஷ்யாவின் இந்த முடிவால் சில நகரங்களில் இருந்து வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
உக்ரைனுக்குள் கடந்த மாதம் 24ம் திகதி நுழைந்த ரஷ்ய இராணுவம், தலைநகர் கீவ் மற்றும் 2வது பெரிய நகரமான கார்கிவ் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து தாக்கி வருகின்றதுடன், சில இடங்கள் முழுமையாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.
உக்ரைனுடனான அமைதி பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்ட படி, 2 நகரங்களில் சிக்கியிருக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வகையில் நேற்று தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை ரஷ்யா வெளியிட்டது.
அதற்கமைய, வோல்னோவாகா மற்றும் மரியுபோல் நகரங்களில், தற்காலிகமாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த போர் நிறுத்த அறிவிப்பு வெளியான 7 மணி நேரங்களுக்கு பின்னர் மீண்டும் உக்ரைனின் மரியுபோல் மற்றும் வோல்னோவாகா நகரங்களை ரஷ்யப் படைகள் குண்டுகளை பொழிந்துள்ளன.
இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இன்று (மார்ச் 5) மாஸ்கோ நேரப்படி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
மரியுபோல் மற்றும் வோல்னோவாகாவிலிருந்து பொதுமக்கள் வெளியேற வசதியாக, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்பின், ரஷ்ய இராணுவ நடவடிக்கைகள் தொடர்கின்றன’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்த அறிவிப்பு அமுலுக்கு வந்த சில மணி நேரங்களில், ரஷ்ய தரப்பு ஒப்பந்தத்தை கடைபிடிக்காததால் மரியுபோலில் இருந்து மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவின் தற்காலிக போர் நிறுத்தம் அடுத்த சில மணி நேரங்களில் முடிவுக்கு வந்ததால், பல்வேறு நகரங்களில் சிக்கியுள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்....
உக்ரைனின் வினிஸ்டா விமான நிலையத்தை அழித்து நொருக்கிய ரஷ்யா படைகள்
வடக்கு, மேற்கு பகுதிகளில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்யா படைகள் நெருங்கியது

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
