உக்ரைனில் இராணுவ வீரர்கள் முன்னிலையில் நடைபெற்ற திருமணம் - வைரலாகும் காணொளி (VIDEO)
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி முதல் போர் தொடுக்க தொடங்கியுள்ளதுடன், உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன.
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் 2வது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை கைப்பற்ற ரஷ்ய படைகள் தீவிரமாக ஏவுகணை வீச்சு, வான் வெளி தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதற்கு உக்ரைன் படையினரும் பதிலடி கொடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், இராணுவ சீருடையில் இருந்த உக்ரைன் தம்பதிகள் சக வீரர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
This couple, Lesya and Valeriy, just got married next to the frontline in Kyiv. They are with the territorial defense. pic.twitter.com/S6Z8mGpxx9
— Paul Ronzheimer (@ronzheimer) March 6, 2022
திருமணம் குறித்த காணொளி ஆன்லைனில் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்த காணொளியில், இராணுவ சீருடையில் வந்த திருமண தம்பதியான லெசியா மற்றும் வலேரி கையில் பூக்கொத்துடன், சக வீரர்களின் உதவியுடன் வீணை போல் ஒலிக்கும் உக்ரைனிய நாட்டுப்புற இசைக்கருவியான பாண்டுராவை வாசித்து திருமண நிகழ்வில் பங்கெடுத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்...
உக்ரைன் மீது மீண்டும் குண்டு மழை: ரஷ்யாவின் முடிவால் தவிக்கும் மக்கள்
உக்ரைனின் வினிஸ்டா விமான நிலையத்தை அழித்து நொருக்கிய ரஷ்யா படைகள்
வடக்கு, மேற்கு பகுதிகளில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்யா படைகள் நெருங்கியது

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
