பரபரப்பாகியுள்ள தமிழக தேர்தல் களம்..! பிரதமர் மோடி - ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துள்ள விஜய்
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று காலை வெளியாகியுள்ள நிலையில், ஆரம்பம் முதலே முன்னிலை வகித்த த.வெ.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. 108 தொகுதிகளில் முன்னிலை பெற்று, த.வெ.க. தனிபெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
த.வெ.க.வின் வெற்றியை தமிழகம் முழுவதும் த.வெ.க.வினர் வெடி, வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருவதோடு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி
இந்நிலையில், தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளை வென்ற விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அதனைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்த விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் தெருவித்திருப்பதாவது:-
மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி. நமது மக்களின் நலனே எங்களின் ஒரே குறிக்கோளாகும்.
Thank you, Hon'ble @PMOIndia, for your greetings. The well-being of our people remains our only goal.
— TVK Vijay (@TVKVijayHQ) May 5, 2026
Transcending politics, we shall focus on the State's progress and the welfare of people of Tamil Nadu. We look forward to the Union Government’s support in this endeavor. https://t.co/EO4h8qC0hF
அரசியலைக் கடந்து, மாநிலத்தின் முன்னேற்றத்திலும், தமிழக மக்களின் நலனிலும் நாங்கள் கவனம் செலுத்துவோம். இந்த முயற்சிக்கு மத்திய அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி
இதனை தொடர்ந்து ராகுல் காந்தியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் தெருவித்திருப்பதாவது:-
மக்களவையின் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் அழைப்பிற்கும் நல்வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! நாங்கள் பொது சேவையில் சிறந்து விளங்குவதற்கும், கூட்டு ஒத்துழைப்பு தேவைப்படும் நமது மாநிலத்தின் பண்பாட்டு கலாச்சாரங்களை பாதுகாப்பதற்கும் தொடர்ந்து உறுதியுடன் இருப்போம்.
My sincere thanks to the Honorable Leader of the Opposition in the Lok Sabha for the call and kind wishes! We shall remain committed to excellence in public service, and preserving the cultural ethos of our state which requires collective cooperation. Beyond politics, we shall… https://t.co/dohAfUSq0e
— TVK Vijay (@TVKVijayHQ) May 5, 2026
அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழக மக்களின் நலனுக்கே நாங்கள் முன்னுரிமை அளிப்போம் என பதிவிட்டுள்ளார்.
காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும் என சொன்ன ரஜினி.. இப்போது விஜய் பற்றி போட்ட பதிவை பாருங்க Cineulagam
சன் டிவி சீரியலில் நாயகனாக நடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்... யார், என்ன தொடர், முழு விவரம் Cineulagam