ஒரே ஒரு வாக்கு வித்தியாசம்! தலைகீழாக மாறிய முடிவு - தமிழக தேர்தலில் கவனத்தை ஈர்த்துள்ள வெற்றி
தமிழக சட்டசபை தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கையில், இந்திய தேர்தல் வரலாற்றிலேயே மிக அரிதான ஒரு முடிவு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் பதிவாகியுள்ளது.
இந்த தொகுதியில் போட்டியிட்ட திமுக அமைச்சர் பெரியகருப்பன் வெறும் 1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார்.
1 வாக்கு வித்தியாசம்
திருப்பத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே திமுக மற்றும் தவெக வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவி வந்தது.
மொத்தம் 30 சுற்றுகள் நடைபெற்ற நிலையில், ஒவ்வொரு சுற்றிலும் முன்னிலை மாறிக்கொண்டே இருந்தது.

இறுதிச் சுற்றின் முடிவில், தவெக வேட்பாளர் ஸ்ரீனிவாச சேதுபதி அமைச்சரை விட ஒரே ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அமைச்சர், ஒரு புதுமுக வேட்பாளரிடம் 1 வாக்கு வித்தியாசத்தில் தோற்றது கவனம் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.