தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள எம்.கே. சிவாஜிலிங்கம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர பிதாவுமான எம்.கே. சிவாஜிலிங்கம், உடல்நிலை மோசமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை
இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் மாதம் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்குச் சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், கடந்த மாதம் 24ஆம் திகதி உடல்நிலை பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.