சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்தார் கிளென் மேக்ஸ்வெல்
அவுஸ்திரேலியாவின் சகலத்துறை விளையாட்டு வீரர் கிளென் மேக்ஸ்வெல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய அணிக்காக 14 ஆண்டுகள் விளையாடியுள்ள கிளென் மேக்ஸ்வெல் 2012-ம் ஆண்டில் ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார்.
கிளென் மேக்ஸ்வெல்
அவுஸ்திரேலிய அணிக்காக 149 ஒருநாள் போட்டிகளில் 3,990 ஓட்டங்களையும், 130 டி20 சர்வதேச போட்டிகளில் 2,897 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 201 ஓட்டங்களும், டி20 சர்வதேச போட்டிகளில் 145 ஓட்டங்ககளும் அவரது அதிகபட்ச ஸ்கோர்களாகும். டி20 சர்வதேச போட்டிகளில் 5 சதங்கள் அடித்துள்ளார்.
தி பிக் ஷோ’ என்று செல்லமாக அழைக்கப்படும் மேக்ஸ்வெல்,2015 மற்றும் 2023-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அவுஸ்திரேலிய அணியிலும், 2021-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற அணியிலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.

2023 ஒருநாள் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெல் ஆடிய ஆட்டம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் மறக்க முடியாத அத்தியாயமாக அமைந்தது எனலாம்.
“சற்று வருத்தமாகவும், அதே நேரத்தில் தவிர்க்க முடியாத முடிவாகவும் இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும், விக்டோரியாவுக்கான 50 ஓவர் மற்றும் நான்கு நாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்” என்று மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய அணியின் சர்வதேச அத்தியாயத்தை முடித்துள்ள மேக்ஸ்வெல், இனி மெல்பர்ன் ஸ்டார்ஸ் உள்ளிட்ட டி20 ஃப்ரான்சைஸ் அணிகளுக்காக தொடர்ந்து விளையாட உள்ளார்.