சற்றுமுன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல்! பிணை கோரிக்கை தொடர்பில் பிறப்பிக்கப்படவுள்ள உத்தரவு
புதிய இணைப்பு
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு இன்று (03) பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளது.
இரண்டாம் இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்றுமுன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்..
முதலாம் இணைப்பு
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு இன்று (03) பிறப்பிக்கப்படவுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் சமர்ப்பித்த வாதங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இது தொடர்பான உத்தரவு இன்று அறிவிக்கப்படும் என கடந்த 28 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.
சந்தேகநபர்கள் உயர் நீதிமன்றத்தில் முன்னிலை
கொழும்பு கோட்டை பகுதியில் அமைந்துள்ள ட்ரான்ஸ்வேர்க் சதுக்கத்திலுள்ள காணியை பல்நோக்குத் திட்டமொன்றுக்காக கிரிஷ் நிறுவனத்துக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, 100 மில்லியன் ரூபாய் கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுக விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட 41 பிரதிவாதிகள் மீது தொடரப்பட்ட வழக்கில், இம்மாதம் 16ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என ஹம்பாந்தோட்டை பிரதான நீதிபதி இசுரு நெத்திகுமரா நேற்று அறிவித்துள்ளார்.
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan