பொலிஸ் உயரதிகாரி வருணி போகஹவத்த விளக்கமறியலில்..
தலைமை பொலிஸ் ஆய்வாளர் வருணி போகஹவத்தவை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோட்டார் வாகனம் ஒன்றை வாங்கியதற்கும், அதற்கான குத்தகை (leasing) தவணைகளைச் செலுத்தியதற்கும் பயன்படுத்தப்பட்ட நிதியின் ஆதாரம் குறித்து விளக்கம் அளிக்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றில் முன்னிலை..
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்ட அவர், இன்று பிற்பகல் (03) மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கோட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய அவரின் வசம் இருந்த நவீன வாகனம் ஒன்றையும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் கைப்பற்றியிருந்தது.
மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெற்ற ஒரு பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மோசடியுடன் தொடர்புடையவர் எனக் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரே, குறித்த வாகனத்திற்கான குத்தகைத் தவணைகளைச் செலுத்தியமை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.