நம் தோல்வி இல்லை - மக்களின் தோல்விதான்..! சமூக வலைத்தளங்களில் பரவும் சீமானின் காணொளி
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தோல்வியடைந்துள்ளார்.
அவர் போட்டியிட்ட காரைக்குடி தொகுதியில் டெபாசிட் இழந்துள்ளார். நாதக வாக்கு சதவீதமும் குறைந்துள்ளது.
தமிழ்ச் சமூகத்தின் குரல்
ஒரு இடத்தை கூட கைப்பற்றாத நிலையில், அவர் ஆதங்கத்தோடு பேசும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
குறித்த காணொளியில்,
"இவ்வளவு போராடியவர்களுக்கு, இவ்வளவு மாற்று அரசியலை எடுத்து வைத்தவர்களுக்கு இன்னும் 10 லட்சம் வாக்குகளை அளித்திருக்கலாம் என்ற வருத்தம் இருக்கிறது. நான் சட்டசபைக்குள் செல்ல வேண்டும் என்ற விருப்பம் இல்லை.
Deposit கூட வரவில்லை என்று கதறி அழும் சீமான் . பாவம் டா நீங்க. இது அனைத்தும் சாட்டை
— SURYA VJ 07 (@Surya_vj_07) May 4, 2026
செயல்கள் 🥲😬 pic.twitter.com/3ot5Y6ZXy7
நாட்டை வெல்லாமல் 2, 3 சீட்டை வென்று என்ன ஆகப்போகிறது. ஆனாலும், போயிருக்கலாம். இந்த தமிழ்ச் சமூகத்தின் குரலாக சட்டசபையில் பேசியிருக்கலாம்.
ஆனால், அதற்கு நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அது நம் தோல்வி இல்லை, மக்களின் தோல்விதான். என் பிள்ளைகளின் உழைப்பு அசாத்தியமானது. நானே எதிர்பார்த்தேன்.
நான் வென்றுவிடுவேன்
நான் வென்றுவிடுவேன், இன்னும் ஐந்தாறு பேர் வெல்வோம் என நான் கணித்திருந்தேன். இன்றைக்கு இல்லையென்றாலும் நாளை செல்வோம். பெரும் பாடு பட்டுள்ளோம். இன்னும் 10 ஆண்டுகள் போராடியும் உறுதியாக வெற்றி பெறுவோம்.

அதில் எந்த மாற்றும் இல்லை. எந்தக் காலத்திலும் தடம்பிறழ மாட்டோம். தன்னலத்திற்காக சமரசம் செய்துகொள்ள மாட்டோம்.
நமக்கு அப்படி ஒரு வெற்றி தேவையில்லை. நூறு விழுக்காடு மக்களை நம்புகிறோம். மக்கள் நம்பும் வரை போராடுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.