இலங்கை அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரருக்கு டெங்குத் தொற்று
ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பத்தும் நிசங்க விலகியுள்ளார்.
இதனால் நாளை ஆரம்பமாகும்தொடரில் அவருக்குப் பதிலாக இளம் வீரர் ஷெவோன் டேனியல் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை அணிக்கு சவால்
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பத்தும் நிசங்க டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் சிம்பாப்வேக்கு எதிரான தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார்.
இந்நிலையில், இளம் வீரர் ஷெவோன் டேனியலை இலங்கை அணிக்கு அழைக்க இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
பத்தும் நிசங்க இல்லாத நிலையில் இலங்கை அணி சவாலை எதிர்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
