இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தொடருந்து இயந்திரங்கள்
இந்தியாவிடமிருந்து 20 தொடருந்து இயந்திரங்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட உள்ளதாக தொடருந்து பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
சேவையில் இருந்து நீக்கம் செய்யப்படும் இயந்திரங்களை இலங்கைக்கு வழங்குவதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி தொடர்பில் தொடருந்து திணைக்களம் பொது மேலாளர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நிபுணர்கள் குழுவின் ஆய்வு
இந்தியாவில் பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட 20 தொடருந்து இயந்திரங்கள் இலங்கைக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தொடருந்து அமைப்பை மின்மயமாக்கும் வகையில், செயலிழந்த 20 டீசல் இந்தியா இயந்திரங்களை வழங்க உள்ளது.
மேலும், அவற்றை இலங்கை தொடருந்து பாதைகளில் இயக்க முடியுமா என சமீபத்தில் இலங்கை வந்த தொடருந்து துறை நிபுணர்கள் குழுவின் ஆய்வு செய்துள்ளனர்.
அதன்படி பெப்ரவரி மாதம் இரண்டு இயந்திரங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தொடருந்து பொது மேலாளர் எச். எம். கே. டபிள்யூ. பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
