உறவுகளை வலுப்படுத்த பாகிஸ்தான் - சீனா இடையே புதிய கூட்டு அறிக்கை வெளியீடு
பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான மூலோபாய உறவுகளை மேலும் ஆழப்படுத்தவும், இருநாடுகளின் கூட்டு பொருளாதாரப் பெருவழியை வலுப்படுத்தவும், குவாடர் துறைமுகத்தை பிராந்திய இணைப்பு மையமாக மாற்றவும் இரு நாடுகளும் ஒரு 'புதிய பரந்த உடன்பாட்டை' எட்டியுள்ளன.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துள்ள நிலையில் இந்த கூட்டு அறிக்கை வெளியாகியுள்ளது.
சீன-பாகிஸ்தான் பொருளாதாரம்
பாகிஸ்தான் முதலீடுகளை ஈர்க்க முயன்று வரும் அதே வேளையில், ஆப்கானிஸ்தானுடனான பதற்றங்களை கையாள்வதிலும், அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரில் மத்தியஸ்தம் செய்வதிலும் ஈடுபட்டுள்ள ஒரு முக்கிய காலகட்டத்தில் இந்த விஜயம் அமைந்துள்ளது.
பீஜிங்கில் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் மற்றும் பிரதமர் லி சியாங் ஆகியோரை ஷெபாஸ் ஷெரீப் சந்தித்த பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பெருவழித் திட்டத்தின் கீழ், 1,300 கிலோமீட்டர் நீளமுள்ள காரகோரம் நெடுஞ்சாலையை மேம்படுத்தவும், குவாடர் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.
பாகிஸ்தானில் உள்ள சீனப் பணியாளர்கள் மற்றும் திட்டங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கைகளை எடுப்பதாக பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது.
அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் போர்
மேலும், அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரில் தற்காலிக போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் பாகிஸ்தான் மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சிகளை சீனா பாராட்டியுள்ளதுடன், மத்திய கிழக்கில் அமைதியை மீட்டெடுப்பதற்கான ஐந்து அம்சத் திட்டத்தை விரைவில் ஏற்றுக்கொள்வதற்கு இரு நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

அதேவேளையில், தாய்வான் விவகாரத்தில் 'ஒரே சீனா' என்ற கொள்கைக்கு பாகிஸ்தான் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
அத்தோடு, பாகிஸ்தான் தலிபான் போன்ற பயங்கரவாத அமைப்புகள் பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்குவதை தடுப்பதில் ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை வலுப்படுத்துவதற்கான சீனாவின் முயற்சிகளையும் பாகிஸ்தான் வரவேற்றுள்ளது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 15 மணி நேரம் முன்
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam