இந்தோ - பசுபிக் பிராந்தியத்தின் அமைதிக்கு சீனா மட்டுமே அச்சுறுத்தல் - தாய்வான் குற்றச்சாட்டு
தாய்வான் தீவைச் சுற்றி சீனா ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக "கூட்டுப் போர்த் தயார்நிலை ரோந்து" என்ற பெயரில் திடீர் இராணுவப் பயிற்சியை மேற்கொண்டு வருவதை அடுத்து, தாய்வான் இராணுவம் நிலைமையைக் கூர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் ஸ்திரமற்ற தன்மைக்கு சீனா மட்டுமே ஒரே காரணம் என்றும் தாய்வான் குற்றம் சாட்டியுள்ளது.
தாய்வானின் தேசிய பாதுகாப்பு பேரவை
தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தாய்வானைச் சுற்றியுள்ள கடல் மற்றும் வான்பரப்பில் 29 சீன போர் விமானங்கள் மற்றும் 7 போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் 24 சீன விமானங்கள், தாய்வான் நீரிணையின் இரு நாடுகளுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற எல்லைக் கோடான 'மத்தியக் கோட்டை' தாண்டி அத்துமீறிப் பறந்துள்ளன.

அண்மையில் பெய்ஜிங்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் ஆகியோர் சந்தித்துப் பேசிய சில நாட்களிலேயே சீனா இந்தத் தாக்குதல் ஒத்திகையை நடத்தியுள்ளது.
மேலும், மேற்கு பசிபிக் பகுதியில் சீனாவின் 'லியோனிங்' விமானம் தாங்கி போர்க்கப்பல் குழுவும் நடமாடுவதாக தாய்வானின் தேசிய பாதுகாப்பு பேரவை பொதுச்செயலாளர் ஜோசப் வூ தெரிவித்துள்ளார்.
14 பில்லியன் டொலர் ஆயுத விநியோகம்
அண்மைய சந்திப்பின் போது, தாய்வான் விவகாரத்தைக் கையாள்வதில் தவறு நடந்தால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடிக்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தாய்வான் அதிகார பூர்வமாக சுதந்திரப் பிரகடனம் செய்யக் கூடாது என ஜனாதிபதி டிரம்ப் அறிவுறுத்தியிருந்த நிலையில், தாய்வான் தனது தன்னாட்சியைப் பாதுகாத்து தற்போதைய நிலையே தொடரும் என்று அறிவித்திருந்தது.
மேலும், தாய்வான் ஜனாதிபதி லாய் சிங்-தே உடன் நேரடியாகப் பேச விருப்பம் உள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
ஈரான் மீதான போரின் காரணமாக தாய்வானுக்கான 14 பில்லியன் டொலர் ஆயுத விநியோகத்தை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள சூழலில், சீனாவின் இந்த திடீர் இராணுவ நடவடிக்கை தாய்வான் நீரிணையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 16 மணி நேரம் முன்
அந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் மரணமடைந்த கவுண்டமணி, செந்தில் பட நடிகர்.. அதிர்ச்சி தகவல் Cineulagam
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam