நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய வன்முறைச் சம்பவம்.. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிக்கை
நீர்கொழும்பு சிறைச்சாலையில் வன்முறைச் சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (06.08.2026) நாடாளுமன்றத்தில் இத்தகவலை வெளியிட்டார்.
புலனாய்வுத் தகவல்
ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கடுமையான வன்முறை மற்றும் மோதல்களில் 7 சிறை அதிகாரிகள் உட்பட பல கைதிகளும் உயிரிழந்தனர்.

அத்துடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம், தொடர்பில் அரச தரப்பிலான குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
இந்நிலையில், குறித்த விசாரணைகள் பற்றிய அறிக்கை தற்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
you may like this..