கபிலவின் சாட்சியாளர்கள் இருவர் குறித்து நீதவானிடம் பொலிஸார் இரகசியமாக சொல்ல முற்பட்ட விடயம்!
ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் குறித்த மரணம் விசாரணையில் 17, 18, 19 மற்றும் 20ஆவது சாட்சியாளர்களின் சாட்சியம் நேற்று (26) அழைக்கப்பட்டது.
இந்நிலையில், 17 ஆவது மற்றும் 18 ஆவது சந்தேகநபர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பான 19 ஆவது மற்றும் 20ஆவது சாட்சிகள் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
குறித்த இரு சாட்சிகளும் ஜனாதிபதி சட்டத்தரணியும் அவரது உதவியாளரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த இருவரும் பொலிஸ் அதிகாரிகளின் அழைப்பாணைக்கு வர முடியாது எனவும் நீதிமன்றத்திலிருந்து அழைப்பாணை வந்தால்தான் சாட்சியமளிக்க வருவதாக தெரிவித்ததாக விசாரணை அதிகாரிகள் நீதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் தமிழ் நிகழ்ச்சி....
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri