இலங்கையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்
சீன அரசால் தேடப்பட்டு வந்த ஐந்து சீனப் பிரஜைகள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டு சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இவர்கள், வெலிசறை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், கடந்த நவம்பர் 26ஆம் திகதி இரவு சீனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்ட விதிகளை மீறி நாட்டில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்
குறித்த ஐந்து பேரும் இரண்டு தனித்தனி விமானங்கள் மூலம் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். முதல் மூன்று சீனப் பிரஜைகள், ஐந்து இலங்கை குடிவரவு அதிகாரிகளின் பாதுகாப்புடன், நவம்பர் 26ஆம் திகதி இரவு 8.50 மணிக்கு China Eastern Airlines விமானம் MU 6018 மூலம் ஷாங்காய்க்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இரண்டாவது குழுவில் ஏனைய இருவர், மூன்று குடிவரவு அதிகாரிகளின் பாதுகாப்புடன், அதே இரவு 10.25 மணிக்கு Air China விமானம் CA 426 மூலம் செங்டுவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தப்பட்ட ஐவரும் சீன குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களை நாடு கடத்துவதற்கான விமானப் பயணச் செலவுகளை சீன அரசாங்கமே ஏற்றுக்கொண்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமிழர் நெஞ்சங்களை கனக்கச் செய்த மாவீரர் நாள்..! நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை