43 வருடங்களுக்கு முன் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள்.. அரசின் அதிரடி தீர்மானம்
1983இல் நடந்த கறுப்பு ஜூலை கலவரங்கள் மற்றும் அவற்றின் தாக்கங்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி, அது குறித்த அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தலைமையில் 11 உறுப்பினர்களைக் கொண்ட விசேட நாடாளுமன்றக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (28) நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.
கறுப்பு ஜூலை சம்பவங்களின் தாக்கம் குறித்து ஆழமான ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை அறிக்கையாகச் சமர்ப்பிப்பதே இக்குழுவின் பிரதான பணியாகும் என சபாநாயகர் தெரிவித்தார்.
விசேட குழு
மேலும், தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் இக்குழு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளது.

நியமிக்கப்பட்டுள்ள விசேட நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள்:
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ,
நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர,
மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்,
நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (ஐக்கிய மக்கள் சக்தி),
நாடாளுமன்ற உறுப்பினர் அமிர்தநாதன் அடைக்கலநாதன் (ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி),
நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி),
நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி (தேசிய மக்கள் சக்தி),
நாடாளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க (தேசிய மக்கள் சக்தி),
நாடாளுமன்ற உறுப்பினர் சேன நாணயக்கார (தேசிய மக்கள் சக்தி),
நாடாளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்க (ஐக்கிய மக்கள் சக்தி) மற்றும்
ஹிருணி விஜேசிங்க (தேசிய மக்கள் சக்தி).