சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஆட்சேர்ப்பில் முறைகேடா..! அரச தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு
81 சுற்றுச்சூழல் அதிகாரிகளின் ஆட்சேர்ப்புப் பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சிலரால் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.
தொடர்புடைய ஆட்சேர்ப்புப் பணி குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் தலைவரும் பணிப்பாளர் நாயகமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஊடக சந்திப்பு நேற்று(27.11.2026) சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் இடம்பெற்றுள்ளது.
போலித்தகவல்களுக்கு அதிகாரிகள் மறுப்பு
281 சுற்றுச்சூழல் அதிகாரிகளின் நியமனம், சுற்றுச்சூழல் அமைச்சரின் தலைமையில், நவம்பர் 25 அன்று சுற்றுச்சூழல் அமைச்சக கேட்போர் கூடத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்சேர்ப்புக்காக சுமார் 14,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், அவற்றுள் இருந்து முறையான நேர்காணல் மற்றும் போட்டித் தேர்வு செயல்முறை மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய போட்டித் தேர்வுகள் இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தால் நடத்தப்பட்டதாகவும், முழு ஆட்சேர்ப்புப் பணியும் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கமைய, சுற்றுச்சூழல் அதிகாரிகளின் ஆட்சேர்ப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளைத் தாங்கள் நிராகரிப்பதாக அதிகாரிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
Bigg Boss 10: கண்ணீருடன் உள்ளே வந்த முனியம்மாவிற்கு கொடுத்த முத்தம்! வெட்கத்தில் லக்ஷ்மி பிரியா Manithan
வாழ்க்கையைச் சீரழித்த லண்டன் பொலிசார்... கதறும் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டவர் News Lankasri