தாய்லாந்திலிருந்து போதைப் பொருள் கடத்தி வந்த நபர் விமான நிலையத்தில் கைது
தாய்லாந்தில் இருந்து பாரியளவில் குஷ் ரக போதைப் பொருளை பெருமளவில் கடத்தி வந்த குற்றச்சாட்டின் கீழ், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து இலங்கை வந்தடைந்துள்ளார்.
'குஷ்' போதைப் பொருள்
கைது செய்யப்பட்டவர் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடையவர் எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சந்தேகநபரின் பயணப் பொதியைச் சோதனையிட்ட போது, 19 பக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருந்த மொத்தம் 8.365 கிலோகிராம் எடையுடைய 'குஷ்' போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருளானது 80 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதி கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையத்திலுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.