மிரிஸ்ஸ கடற்பகுதியில் மர்மப் படகு மீட்பு - போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சந்தேகம்
மாத்தறை - மிரிஸ்ஸ கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தில் டிங்கி படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தளரம்ப கடற்கரைக்கு அப்பால் இலங்கை கடற்படையும் கடலோரக் காவல்படையும் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே, இந்த படகு மீட்கப்பட்டுள்ளது.
இந்த படகை பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் சம்பவம்
இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையின்போது சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும், கைப்பற்றப்பட்ட படகு மேலதிக விசாரணைகளுக்காக கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகில் போதைப்பொருள் கடத்தப்பட்டதா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த நிலையில், மேலதிக தகவல்கள் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.