இலங்கையில் ஏற்பட்டுள்ள பரிதாப நிலை! ரணில் வைத்திருக்கும் திட்டம்
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை எவ்வாறு இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தப் போகின்றது என்பது சவாலான விடயமாகவே இருக்கும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
ஐ.நா இலங்கைக்கு ஏற்படுத்தியுள்ள சவால்! >>> மேலும்படிக்க
2 கொரியாவிலிருந்து தனது மருமகனை அழைத்து வருவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்ற அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் ஆலோசகரான பிக்கு ஒருவரிடம் 72 லட்சத்திற்கும் அதிகமான தொகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கை அரசியல்வாதியுடன் நெருக்கமானவருக்கு யுவதி கொடுத்த பெரும் அதிர்ச்சி >>> மேலும்படிக்க
3 அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாத தேசிய கொள்கை கட்டமைப்பை உருவாக்குவதே ஜனாதிபதி ரணிலின் திட்டம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் தவிசாளருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
“அடுத்த 25 வருடங்களுக்கு ரணில் வைத்திருக்கும் திட்டம்” >>> மேலும்படிக்க
4 46 பேருடன் பல மாதங்களாக காணாமல் போயிருந்த தஹாமி துவா என்ற படகு ரீயூனியன் தீவின் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையர்களுடன் காணாமல் போனதாக கூறப்படும் படகு ரீயூனியன் தீவில் மீட்பு >>> மேலும்படிக்க
5 இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பினை தேடிச் செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
வெளிநாடு செல்லும் இலங்கையர்களை குறிவைத்து நடக்கும் பாரிய மோசடி! >>> மேலும்படிக்க
6 தற்போது அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் ஆசிரியர்களுக்கு போதாது, ஆகவே சம்பள பிரச்சினை தொடர்பில் மீண்டும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர் சம்பளம் தொடர்பில் வெடிக்கவுள்ள போராட்டம்! கோட்டாபயவுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை >>> மேலும்படிக்க
7 இறக்குமதி செய்யப்படும் தோடம் பழம் ஒன்றின் விலையானது 600 ரூபாவுக்கும் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பரிதாப நிலை! தோடம் பழம் 600 ரூபா : திராட்சை 5000 ரூபா >>> மேலும்படிக்க
8 பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கில் கலந்துக்கொள்வதற்காக இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, லண்டன் நகரை சென்றடைந்துள்ளார்.
ஜனாதிபதி லண்டன் சென்றடைந்துள்ளார் >>> மேலும்படிக்க
9 மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி கிரியைகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா சென்றுள்ளார். இதன்காரணமாக அவரின் கீழ் உள்ள அமைச்சுகளுக்கு, அதன் இராஜாங்க அமைச்சர்களை, பதில் அமைச்சர்களாக நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.
மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி கிரியைகளில் பங்கேற்ற ரணில்: அமைச்சுக்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் >>> மேலும்படிக்க
10 இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 20 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர். குறித்த தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் மண்ணுக்குள் புதைந்த 20 பேர் தொடர்பில் தகவல் எதுவும் தெரியவரவில்லை. எனினும் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக இடம்பெறுகின்றது.
தங்கம் மீதான ஆசையால் பறிப்போன உயிர்கள் >>> மேலும்படிக்க