ஜனாதிபதி லண்டன் சென்றடைந்துள்ளார்
பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கில் கலந்துக்கொள்வதற்காக இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, லண்டன் நகரை சென்றடைந்துள்ளார்.
ஜனாதிபதியை வரவேற்ற அரசரின் விசேட பிரதிநிதி
லண்டன் சென்றடைந்த ஜனாதிபதியை பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி செயலகத்தின் இந்திய-பசுபிக் பிராந்திய பணிப்பாளரும் இந்தியாவுக்கான பணிப்பாளருமான பென் மெலர், பிரித்தானிய அரசரின் விசேட பிரதிநிதி பிரதி லெப்டினட் டேவ் ஈஸ்டன் மற்றும் பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
புதன் கிழமை நாடு திரும்பும் ஜனாதிபதி
லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் அபேவில் நாளை நடைபெறும் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 21 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam
