மகாராணியின் இறுதிச் சடங்கு - வரலாற்றில் இடம்பிடிக்கும் ஜனாதிபதி ரணில்
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் அரச தலைவர்கள் மத்தியில் பிரித்தானிய வரலாற்றுப் புத்தகத்தில் இணைவதற்கான அரிய வாய்ப்பு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிடைக்கவுள்ளது.
எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் கலந்துகொண்ட தம்பதிகளின் மகனான ரணில் விக்ரமசிங்க, எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரித்தானிய வரலாற்றுப் புத்தகத்தில் இணையவுள்ளார்.
நெதர்லாந்தின் முன்னாள் ராணி இளவரசி பீட்ரிக்ஸ், இதேபோன்ற வரலாற்றைக் கொண்ட அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெற்றோர்களான எஸ்மன்ட் விக்கிரமசிங்க மற்றும் நளினி விக்கிரமசிங்க ஆகியோர் பெப்ரவரி 1952 இல் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் பிரதமர் டட்லி சேனாநாயக்கவுடன் கலந்துகொண்டனர்.
இலங்கை ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள சிறப்பு வாய்ப்பு
இளவரசி பீட்ரிக்ஸின் பெற்றோரும் அரச குடும்பத்தாராக முடிசூட்டு விழாவில் கலந்துகொண்டனர். உலக வரலாற்றில் அரச குடும்பத்திற்கு வெளியே இவ்வாறானதொரு வாய்ப்பைப் பெற்ற முதல் நபர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆவார்.
மகாராணியின் முடிசூட்டு விழாவின் போது, இலங்கையின் அப்போதைய பிரதமர் டட்லி சேனநாயக்காவுக்கு நடந்த ஒரு சிறப்பு நிகழ்வு குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் கூறியிருந்தார்.
அந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டன் சென்று ராணியின் இறுதி ஊர்வலத்தில் இலங்கை மக்கள் சார்பாக கலந்துகொள்ளவுள்ளார்.

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
