மகாராணியின் இறப்பிற்கு காரணம் என்ன - கசிந்துள்ள ஒரு தகவல்
பிரித்தானிய மகாராணி எலிசபெத் எலும்பு தொடர்பான பிரச்சனையால் உயிரிழந்தார் என அரச குடும்ப வரலாற்று ஆய்வாளர் Lady Colin Campbell தெரிவித்துள்ளார்.
ராணியார் கடந்த 8ம் திகதி அமைதியாக உயிரிழந்தார் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. அவருக்கு என்ன உடல்நலப்பிரச்சனை இருந்தது என்பது தொடர்பில் தற்போது அரச குடும்ப வரலாற்று ஆய்வாளர் Lady Colin Campbell பேசியுள்ளார்.
எலும்பு புற்றுநோயால் அவதி
மகாராணி உயிரிந்ததாக அறிவிக்கப்பட்டதற்கு 90 நிமிடங்களுக்கு முன்னரே அவர் இறந்துவிட்டார் என Campbell வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், மகாராணி எலும்புகள் தொடர்பான தீவிரமான பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார் என தெரிவித்திருந்தார்.
ராணியாரின் இறப்புக்கான காரணத்தை royal palace அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தவில்லை என்றாலும் அவர் ஒருவகையான எலும்பு புற்றுநோயால் அவதிப்பட்டதாக Campbell கூறுகிறார்.
வயது முதிர்வால் இறப்பு
மேலும் ராணியின் கண்ணியம் மற்றும் தனியுரிமைக்கு மதிப்பளித்து, நோய் தொடர்பாக துல்லியமாக தெரிவிக்கும் வார்த்தையை நான் பயன்படுத்த விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
2021 இல் ராணியின் கணவர் இளவரசர் பிலிப்பின் மரணத்திற்கான அதிகாரப்பூர்வ காரணத்தையும் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிடவில்லை.
இருப்பினும், அவரது இறப்புச் சான்றிதழில் அரச மருத்துவக் குழுவின் தலைவரான சர் ஹூ தாமஸ் வயது முதிர்வால் இறப்பதாக கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.