அநுரவை மிரட்டும் தொனியில் விமர்சனங்கள்.. கோட்டாபய குறித்து பெருமிதம் கொள்ளும் நாமல்
நாடாளுமன்ற உறுப்பினர், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட எதிர் தரப்பு அரசியல்வாதிகள் பலர் தொடர்ந்து தற்போதைய அரசாங்கத்தை நோக்கி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இவற்றின் ஒரு சில விமர்சனங்களுக்கு அரசாங்கத்தின் தரப்பிலிருந்து பதிலளிக்கப்பட்டாலும் சில விமர்சனங்கள் கண்டுக் கொள்ளப்படுவதில்லை என அரசியல் பரப்பில் பேசப்படுகின்றது.
இந்நிலையில், அண்மையில், நாமல் ராஜபக்ச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட போராட்டங்கள் குறித்து கருத்து வெளியிட்டார்.
அதன்போது, சர்வதேச நாடுகளில் அரசாங்கத்திற்கு எதிராக போராடுபவர்கள் மீது கடுமையான வன்முறை நடவடிக்கைகள் கையாளப்பட்டாலும் கோட்டாபய அவ்வாறு செய்யவில்லை என குறிப்பிட்டார்.
அதாவது, அரகலய போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களுக்கு ஆபத்து எதுவும் ஏற்படாத வகையில், தான் அவர், ஒரு அடி பின்னெடுத்து வைத்தார் எனவும் நாமல் சுட்டிக்காட்டினார். இக்கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ள அதேநேரம் கடும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.
இது உள்ளிட்ட நாட்டில் நடந்த பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராயும் வகையில் வருகின்றது இன்றைய நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 46 நிமிடங்கள் முன்
காரை நிறுத்தச்சொல்லி இறங்கி குதித்துவிட்டார்.. தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! கதறும் குடுபத்தினர் Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri