கொழும்பில் ஐவர் மீது துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி
புதிய இணைப்பு
கொழும்பு-13-ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள சிகை அலங்கார நிலையமொன்றிற்குள் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, கடை உரிமையாளர் உட்பட நால்வர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிகை அலங்கார நிலையத்திற்கு முடி வெட்டுவதற்காக வந்த மூன்று நபர்களில் ஒருவரே சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
முதலாம் இணைப்பு
கொழும்பு-13-ஜிந்துப்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவமானது சற்றுமுன்னர் ஜிந்துப்பிட்டி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை,தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும்நேற்று (13) பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கார் ஒன்றில் வந்த குழுவினர் டி-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி சுமார் 10 தடவைகள் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் கூறினர்.




ஹார்முஸ் திறந்திருப்பதாக ட்ரம்ப்... முற்றுகை அமுலுக்கு வந்ததாக அமெரிக்க இராணுவம் எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri