கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பெண்
நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் பெண் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்று (19) அதிகாலை 12.45 மணிக்கு டுபாயிலிருந்து ஃப்ளை டுபாய் FZ-569 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதனையடுத்து "கிரீன் சேனல்" வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிகரெட்டுகள் கைப்பற்றல்
இதன்போது இவரிடமிருந்து சுமார் 354,000 ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan