வெனிசுலா அரசை கவிழ்க்கும் அமெரிக்காவின் முயற்சி! சீனா கடும் எச்சரிக்கை
அமெரிக்கா, வெனிசுலா அரசை கவிழ்க்கும் முயற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீனா எச்சரித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மதூரோவையும் அவரது மனைவியையும் கைது செய்து நாட்டை விட்டு வெளியே கொண்டு சென்றதாக கூறியதைத் தொடர்ந்து, சீனா வெளியிட்ட இரண்டாவது அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சீனா எச்சரிக்கை
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதூரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸ் ஆகியோரின் பாதுகாப்பு முதன்மை அளிக்கப்பட வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சர்வதேச சட்டத்தின் வெளிப்படையான மீறல் என்றும் சீனா தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக வெளியிட்ட அறிக்கையில், வெனிசுலா மற்றும் அதன் ஜனாதிபதிக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளை சீனா கடுமையாக கண்டித்து, அவற்றை “அதிகார ஆதிக்கச் செயல்கள்” மற்றும் “வெளிப்படையான வன்முறைப் பயன்படுத்தல்” என குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தை மதித்து அமெரிக்கா செயல்பட வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.