ட்ரம்புக்கு டென்மார்க் பிரதமர் விடுக்கும் பரபரப்பான கோரிக்கை
கிரீன்லாந்தை (Greenland) கைப்பற்றுவதாக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை நிறுத்துமாறு டென்மார்க் (Denmark) பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் Mette Frederiksen அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வலியுறுத்தியுள்ளார்.
கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கான அவசியம் குறித்து அமெரிக்கா அச்சுறுத்தும் வகையில் பேசுவது பயனற்றது என்று டென்மார்க் பிரதமர் கூறியுள்ளார்.
ட்ரம்பிடம் கோட்டுக் கொண்ட விடயம்
டென்மார்க் இராச்சியத்தின் மூன்று நாடுகளில் எதையும் இணைக்க அமெரிக்காவிற்கு உரிமை இல்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், கிரீன்லாந்து அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறும் சாத்தியக்கூறுகளை ட்ரம்ப் பலமுறை எழுப்பியதாகவும், அதன் மூலோபாய இருப்பிடம் மற்றும் கனிம வளங்களை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ட்ரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஸ்டீபன் மில்லரின் மனைவி கேட்டி மில்லர், "விரைவில்" என்ற வார்த்தையுடன் அமெரிக்கக் கொடியின் நிறத்தில் கிரீன்லாந்தின் வரைபடத்தை ட்வீட் செய்ததை அடுத்து இந்த கருத்துக்கள் வந்துள்ளன.