வட்டவளை-நாவலப்பிட்டி தொடருந்து சேவை தொடர்பில் வெளியான தகவல்
வட்டவளையில் இருந்து நாவலப்பிட்டிக்கான பயணிகள் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
டித்வா சூறாவளியில் தொடருந்து பாதைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சேவை நிறுத்தப்பட்டிருந்தது. பாடசாலை முதலாம் தவணை இன்று ஆரம்பமானதோடு மாணவர்கள் நலன் கருதி மற்றும் அலுவலக ஊழியர்களுக்காக இன்று (05.01.2026) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சேவை நடத்தப்படும் நேரங்கள்
அதன்படி, காலை 5:15 மணிக்கு வட்டவளை தொடருந்து நிலையத்திலிருந்து பயணத்தைத் ஆரம்பிக்கும் தொடருந்து, காலை 6:30 மணிக்கு நாவலப்பிட்டி ரயில் நிலையத்தை வந்தடையும்,
மேலும் பிற்பகல் 2:15 மணிக்கு மீண்டும் நாவலப்பிட்டியிலிருந்து வட்டவளை தொடருந்து நிலையத்திற்கு சேவையை நடத்த தொடருந்து கட்டுப்பாட்டு அறை நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் இந்த தொடருந்து ஹட்டன் தொடருந்து நிலையம் வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் நிலைய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.