புதிய உச்சத்தை நோக்கி நகரும் தங்கத்தின் விலை: நகை வாங்க காத்திருப்போருக்கு சோகமான செய்தி
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (23.02.2026) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5107 டொலர்களாக உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த வார இறுதியைக் காட்டிலும் இன்று 44 டொலர்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது 0.95 சதவீத உயர்வாகும் என தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் சூழல்கள் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் இன்று இந்த பெறுமதி பதிவாகியுள்ளது.
வெள்ளியின் விலை
வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையில் 2 டொலர்களால் அதிகரித்து, தற்போது ஒரு அவுன்ஸ் வெள்ளி 85 டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த வார இறுதியில் கொழும்பு சந்தையில் 24 கரட் தங்க பவுணொன்றின் விலை 396000 ரூபாவாகவும், 22 கரட் தங்க பவுணொன்றின் விலை 366300 ரூபாவாகவும் இருந்தது.
சர்வதேசச் சந்தை நிலவரங்களுக்கு அமைய உள்நாட்டுச் சந்தையிலும் இன்று (23.02.2026) தங்கத்தின் விலை 4,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam