பாதாள உலகக்கும்பல் தலைவரின் வீட்டிற்கு தீ வைப்பு - பொலிஸார் விசாரணை
பாதாள உலகக்கும்பல் தலைவர்களில் ஒருவரான தெம்பிலி லஹிரு என்பவரின் வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் பல பாகங்களிலும் மேற்கொள்ளளப்பட்ட பல்வேறு குற்றச்செயல்கள் காரணமாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில், தெம்பிலி லஹிரு நாட்டை விட்டுத்தப்பியோடி தலைமறைவாகியிருந்தார்.
அவசரமாக இடமாற்றப்படும் நீர்கொழும்பு சிறைச்சாலை பெண் கைதிகள்! அடுத்தடுத்து பதிவாகும் மரணங்கள் - தீவிரமடையும் விசாரணை
பொலிஸார் விசாரணை
எனினும் கடந்த 2025ம் ஆண்டில் இந்தோனேசிய பொலிஸாரினால் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்டவர்களுடன் தெம்பிலி லஹிருவும் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.
தெம்பிலி லஹிரு தற்போதைக்குத் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது வீடு, அடையாளம் தெரியாத ஒரு குழுவினரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
வலஸ்முல்லை அருகே மித்தெனிய, ஜுலம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள குறித்த வீடு, தீ வைப்பு சம்பவம் காரணமாக பெரும் சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.