காணொளி எடுக்க வேண்டாம்..! ஊடகவியலாளரை தள்ளிவிட்ட ரணிலின் பாதுகாப்பு அதிகாரி
முன்னாள் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க அரச பணத்தை தன்னுடைய தனிப்பட்ட விஜயத்திற்கு பயன்படுத்தியது தொடர்பிலான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது வழக்கு சம்மந்தமான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றும் விசாரணைகள் அணைத்தும் நிறைவடைந்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து விசாரணை ஆவனங்கள் அனைத்தும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்படும், அதன் பிறகுதான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுமா? இல்லையா? என்பது குறித்த முடிவு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ரனில் விக்ரமசிங்க தனது வழக்கினை முடித்துவிட்டு வெளியே வருகின்ற பொாழுது, அதனை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவருக்கு ரனில் விக்ரமசிங்க தரப்பில் இருந்த ஒருசில அதிகாரிகள் எதிர்ப்பை வெளியிட்டமையினால் அங்கு ஓர் அசம்பாவிதமாக நிலை தோன்றியுள்ளது.
மக்களுடைய பணத்தை பயன்னபடுத்திய குற்றத்தின் அடிப்படையிலேயே இவர் மீது குறித்த வழக்கு தாக்கல் செய்ப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் ஊடகவியலாளர்களுக்கு இவர்கள் எதிப்பை தெரிவிப்பது ஏன்? பயமா? அல்லது இதற்குப் பின்னால் வேறு காரணங்கள் எதுவும் உள்ளதா? என்ற சந்தேகம் எழுகின்றது. இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விடயங்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சின் ஊடாக பார்ப்போம்..
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri