நீர்கொழும்பு சிறையில் இடம்பெற்ற கொடூர மோதல்! திட்டமிட்ட நபர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்
நீர்கொழும்பு சிறையில் வெடித்த மோதல் குறித்து பாதுகாப்புப்படைகள் பல முக்கிய விபரங்களை வெளியிட்டுள்ளன.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு வழிவகுத்த, இரண்டு கைதிகள் குழுக்களுக்கு இடையிலான கொடூரமான தாக்குதல் மற்றும் கொலை, கட்டுவெல்லகம சுரேஷ் என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் முழுமையாக திட்டமிடப்பட்டது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறையில் கடுமையான மோதல்கள்
இந்நிலையில், சிறையில் இரண்டு நாட்களாக கடுமையான மோதல்கள் நடந்தபோதிலும், மோதலை தூண்டியதாக கூறப்படும் கட்டுவெல்லகம சுரேஷ் என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு எந்தவித காயமோ அல்லது பாதிப்போ ஏற்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

தற்போது அவர் பூசா உயர் பாதுகாப்புச்சிறையில் பாதுகாப்பாக உள்ளதாகவும் பொலிஸ் தரப்பிலிருந்து கூறப்படுகின்றது. இந்த மோதல்களில் முதல் நாளில் கொல்லப்பட்ட இரண்டு கைதிகளின் தாக்குதல் மற்றும் கொலை, சுரேஷின் தலைமையில் நடத்தப்பட்டது என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
சிறையில் சுரேஷ் நடத்தி வந்த போதைப்பொருள் கடத்தல் குறித்த தகவலைச் சிறை அதிகாரிகளுக்கு வழங்கியதாகக் கூறப்பட்டதன் காரணமாகவே, இந்த மோதல் இடம்பெற்றுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட இரு கைதிகளும், கட்டுவெல்லகமவில் சுரேஷின் கும்பலுடன் தொடர்புடைய நெருங்கிய கூட்டாளிகள் என்றும், பின்னர் சுரேஷின் கும்பலிலிருந்து பிரிந்து, தனிப்பட்ட குழுவுடன் சிறையில் இருந்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்
போதைப்பொருள் கடத்தல் குறித்த தகவல்களை சிறை அதிகாரிகளுக்கு வழங்கியதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கட்டுவெல்லகமவில் உள்ள சுரேஷ் மீது கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு நபர்களை தாக்கி காயப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு தொடர்பாக அவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
கட்டுவெல்லகம சுரேஷிடம் எதிர்காலத்தில் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் கொழும்பு குற்றப் பிரிவு ஆகியவற்றால் விசாரணை நடத்தப்பட உள்ளது.
சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை! கண்ணீருடன் விடுக்கப்பட்டுள்ள உருக்கமான கோரிக்கை
YOU MAY LIKE THIS VIDEO
கருப்பு பட மாபெரும் வெற்றி, அடுத்த பட சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சூர்யா?... அதுவும் இத்தனை கோடியா? Cineulagam