நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்- சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்

Law and Order
By Kamal Jul 08, 2026 04:16 PM GMT
Report

தடுப்புக் காவல் மையங்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் அனைத்து வகையான வன்முறைச் செயல்களையும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இத்தகைய சம்பவங்கள் நாட்டின் சட்டத்தின் ஆட்சியை சீர்குலைப்பதுடன், நீதித்துறை அமைப்பின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் பாழாக்கும் என அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றின் மூலமாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது கடுமையான கரிசனைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்- சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம் | Statement From The Baslon The Negombo Prison

கடந்த ஜூலை 5 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர வன்முறைச் சம்பவங்கள் குறித்து சட்டத்தரணிகள் சங்கம் தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான மோதலில் வெடித்த இந்த கொடூர வன்முறையில், 7 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கைதிகள் மற்றும் சிறைச்சாலை ஊழியர்கள் என இருதரப்பினரின் உயிருக்கும் இத்தகைய சம்பவங்கள் பெரும் அச்சுறுத்தலாக அமைவதாக சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளிலும் இதுபோன்ற பதற்றமான சூழ்நிலைகள் நிலவி வருவதையும், சட்டரீதியான கண்காணிப்பு அமைப்புகள் எதிர்கொள்ளும் சவால்களையும் சுட்டிக்காட்டியுள்ளது.

சிறைக்குள் இருக்கும் நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளை கண்ணியத்துடனும் சட்டப்பூர்வமாகவும் பராமரிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளது. தவறு செய்ததாக நிரூபிக்கப்படும் கைதிகள், சிறை அதிகாரிகள் அல்லது இதர உயர் அதிகாரிகள் என எந்தவொரு தரப்பாக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தேவையான மருத்துவ உதவிகளும், நஷ்டஈடு உள்ளிட்ட இதர ஆதரவுகளும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வன்முறைச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் சுயாதீன குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவை சட்டத்தரணிகள் சங்கம் வரவேற்றுள்ளது.

எனினும், இந்த விசாரணையானது முற்றிலும் சுயாதீனமானதாகவும், நடுநிலையானதாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், மிக விரைவாகவும் நடத்தப்பட வேண்டும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஏனெனில், இந்த விசாரணை முறையின் நம்பகத்தன்மையைப் பொறுத்தே நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை தங்கியுள்ளது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. 

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US