அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்
அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பின்மூன்றாம் கட்டம் 2027 ஜனவரியில் வழங்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் போது உரையாற்றிய பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் அடிப்படை ஊதிய உயர்வுத் திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்கள் 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.
விசேட ஆணைக்குழுவின் அறிக்கை
சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களில் தற்போது காணப்படும் முரண்பாடுகளை இனங்காணப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்த வருடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் சம்பள முரண்பாடுகளைச் சரிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இதற்கிடையில், நாடாளுமன்றச் சலுகைகளைப் பயன்படுத்தி, தனிப்பட்ட ரீதியில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளைப் பிரதமர் விமர்சித்தார்.
அரசாங்கம் ஆக்கபூர்வமான மற்றும் கண்ணியமான விமர்சனங்களை வரவேற்பதாகவும், அதேவேளையில் எதிர்க்கட்சியினர் பொறுப்புடனும் கண்ணியத்துடனும் செயற்பட வேண்டும் என பிரதமர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.